2024 ஒலிம்பிக் விளையாட்டுகள்: 7.2 மி. நுழைவுச்சீட்டுகள் விற்பனை

1 mins read
c7fb22ee-bacc-4a6f-b808-9296c3980d22
அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரங்கேறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கான நுழைவுச்சீட்டுகளில் 7.2 மில்லியன் விற்கப்பட்டுள்ளன; அடுத்த வாரம் மேலும் 400,000 நுழைவுச்சீட்டுகள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு 10 மில்லியன் நுழைவுச்சீட்டுகளை விற்க ஏற்பாட்டாளர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பு இவ்வளவு வேகமாக நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றார் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மைக்கல் அலோயிசியோ.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் விளையாட்டுகள் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக பெரும்பாலும் ரசிகர்கள் இல்லாமல் நடந்தது.

குறிப்புச் சொற்கள்