மும்பை இந்தியன்ஸ் குழுவுக்குத் திரும்பவுள்ள ஹார்திக்

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் வீரரான ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் குழுவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குஜராத் டைட்டன்சில் விளையாடும் ஹார்திக், 2015ஆம் ஆண்டு முதன்முதலில் இந்திய பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்றபோது மும்பை குழுவில்தான் ஆடினார். அவரை 150 மில்லியன் ரூபாய்க்கு (2.14 மில்லியன் வெள்ளி) மும்பை வாங்குவதாக இஎஸ்பிஎன் நிறுவனத்தின் கிரிக்இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்தது.

எதிர்பார்த்தபடி இந்தப் பரிவர்த்தனை இடம்பெற்றால் ஐபிஎல் வரலாற்றில் ஆக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை ஹார்திக்கைச் சேரும். எனினும், மும்பைக்குப் போதுமான நிதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

30 வயது ஹார்திக், இரண்டு ஆண்டுகளாக டைட்டன்சுக்கு விளையாடி வருகிறார். 2022ஆம் ஆண்டில் அக்குழு முதன்முறையாக ஐபிஎல் லீக்கில் பங்கேற்றது.

முதல் ஆண்டிலேயே டைட்டன்ஸ் லீக் விருதை வெல்ல ஹார்திக் உறுதுணையாக இருந்தார். அப்பருவத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான இறுதியாட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹார்திக்.

இரண்டாவது பருவத்தின் இறுதியாட்டத்திற்கும் டைட்டன்ஸ் முன்னேறியது. அப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்குப் பின்னால் முடிந்தது.

அவ்விரு பருவங்களிலும் ஹார்திக்கின் வழிகாட்டலில் டைட்டன்ஸ் லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அந்த காலகட்டத்தில் 30 இன்னிங்சில் ஹார்திக் மொத்தம் 833 ஓட்டங்களை எடுத்தார், 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் காயமுற்ற ஹார்திக் தற்போது குணமடைந்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!