தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்டிக்கு முட்டுக்கட்டையாக இருந்த லிவர்பூல்

1 mins read
b696d25f-6d72-43d4-b487-323e9d948524
லிவர்பூலின் கோலைப் போட்ட டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட். - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியுடன் லிவர்பூல் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

ஆட்டத்தில் 11 நிமிடங்கள் எஞ்சியிருந்த வேளையில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் லிவர்பூலின் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட். முற்பாதியாட்டத்தில் எர்லிங் ஹாலண்ட் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார்.

பிரிமியர் லீக்கில் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் சிட்டியின் சொந்தத் திடலான எட்டிஹாட் அரங்கில் எந்தக் குழுவும் சமநிலைகூட கண்டதில்லை. அப்படிப்பட்ட சூழலில் லிவர்பூல் விட்டுக்கொடுக்காமல் விளையாடி சிட்டியை வெல்லவிடாமல் செய்தது.

இந்த ஆட்டத்தில் லிவர்பூல் சற்று களையிழந்து காணப்பட்டது. அப்படியிருந்தும் சிட்டிக்கு எதிராக சமநிலை கண்டது தனது குழுவுக்கு நம்பிக்கை தரும் என்றார் அலெக்சாண்டர் ஆர்னால்ட்.

லீக்கில் தொடர்ந்து இரு ஆட்டங்களில் சமநிலை கண்டுள்ளது சிட்டி.

குறிப்புச் சொற்கள்