லண்டன்: பிரென்ட்ஃபர்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர்சனல்.
ஆட்டம் கோலின்றி சமநிலையில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 89வது நிமிடத்தில் கய் ஹாவர்ட்ஸ் கோல் போட்டு ஆர்சனலை வெல்லச் செய்தார்.
மற்றோர் ஆட்டத்தில் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை வெல்லத் தவறியதால் ஆர்சனல் முதலிடத்துக்குத் தாவியது. சிட்டியும் லிவர்பூலும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
சென்ற லீக் பருவத்தில் பல மாதங்களாக ஆர்சனல் பட்டியலில் முதலிடம் வகித்தது. ஆனால், கடைசி சில ஆட்டங்களில் அக்குழு களையிழந்து போனதால் லீக் கிண்ணம் சிட்டிக்குச் சென்றது.
இப்பருவம் அதற்கு ஈடுகட்டும் இலக்குடன் விளையாடி வருகிறது ஆர்சனல்.