முன்னாள் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் டெரி வெனபல்ஸ் மறைவு

முன்னாள் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் டெரி வெனபல்ஸ் மறைவு

1 mins read
b97d3e61-0698-4bad-9286-4f2c39f1ae03
இளம் வயதில் வெனபல்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: முன்னாள் இங்கிலாந்து காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் டெரி வெனபல்ஸ் காலமானார். அவருக்கு வயது 80.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1990களின் நடுப்பகுதியில் இங்கிலாந்து சிரமப்பட்டுவந்த காலத்தில் வெனபல்ஸ் அந்த அணியை மீண்டு எழச் செய்தார்.

1994ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெறவில்லை. அதற்குப் பிறகு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ காற்பந்துப் போட்டியில் அவரின் தலைமையில் இங்கிலாந்து அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறியது. அதனைத் தொடர்ந்து அணி ஓரளவு சீரானது.

80களில் வெனபல்ஸ் ஸ்பெயினின் பார்சிலோனா குழுவின் பயிற்றுவிப்பாளராகவும் சிறப்பாகச் செய்தார். 11ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக 1985ல் பார்சிலோனாவுக்கு ஸ்பானிய லீக் கிண்ணத்தை வென்றுதந்தார்.

அதற்கு மறுஆண்டு வெனபல்சின் தலைமையில் 25 ஆண்டுகளில் முதன்முறையாக அக்குழு ஐரோப்பிய கிண்ணப் போட்டியின் (இன்று யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் என்றழைக்கப்படும் போட்டி) இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், குவீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் உள்ளிட்ட குழுக்களின் நிர்வாகியாகவும் வெனபல்ஸ் பணியாற்றியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்