அபுதாபி: இவ்வாண்டு இடம்பெற்ற 22 ஃபார்முலா ஒன் (எஃப்1) பந்தயங்களில் 19ல் வெற்றியடைந்து அசத்தியிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தலைநகர் அபுதாபியில் அரங்கேறிய இவ்வாண்டின் கடைசி கிராண்ட் பிரி பந்தயத்தில் 17.993 வினாடிகள் வித்தியாசத்தில் முடித்து ரெட் புல் அணியின் வெர்ஸ்டாப்பன் வெற்றிபெற்றார்.
விட்டுக்கொடுக்காமல் ஓட்டிய ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லர்க் இரண்டாவது இடத்தையும் பிடிக்க முடியாமல் போனது.
இரண்டாவதாக முடித்த செர்ஜியோ பெரெசுக்கு ஐந்து புள்ளிகள் குறைக்கப்பட்டதால் மெர்சடிசின் ஜார்ஜ் ரசல் அவ்விடத்தைப் பிடித்தார். மெக்லேரனின் லாண்டோ நோரிசுடன் மோதியதால் பெரெஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

