ரெட் புல் ஆதிக்கம்; முன்னெப்போதும் இல்லாத $13 மில்லியன் நுழைவுக் கட்டணம்

1 mins read
f22f63af-e2d5-4005-be1e-a988fa7fa50e
பந்தயத்தில் வாகை சூடி கொண்டாடிய மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: எஃப்1 கார் பந்தயத்தில் ரெட் புல் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரெட் புல் அணியின் நட்சத்திர ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளார்.

இப்பருவத்தில் அவர் களமிறங்கிய 22 பந்தயங்களில் 19 முறை முதலிடம் பிடித்தார்.

எனவே, அடுத்த ஆண்டு ரெட் புல் அணிக்கான நுழைவுக் கட்டணம் 10 மில்லியன் அமெரிக்க டாலராக ($13.4 மில்லியன்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஆண்டில் அணிகளின் செயல்பாட்டைப் பொறுத்து அவற்றுக்கான நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட.

இப்பருவத்தஇல் ரெட் புல் அணி 860 புள்ளிகளைப் பெற்றது.

அவற்றில் 575 புள்ளிகளை வெர்ஸ்டாப்பன் குவித்தார்.

ரெட் புல் அணியைச் சேர்ந்த மற்றொரு வீரரான செர்ஜியோ பெரேஸ் 285 புள்ளிகள் பெற்றார்.

அடுத்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த எஃப்1 நுழைவுக் கட்டணம் 34 மில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்