சாம்பியன்ஸ் லீக்: ரியால் முதலிடம்

சாம்பியன்ஸ் லீக்: ரியால் முதலிடம்

1 mins read
67d7c6f1-ba17-49b9-abad-22a28858879e
நேப்பொலிக்கு எதிரான ஆட்டத்தில் ரியாலின் இரண்டாவது கோலைப் போடும் ஜூட் பெலிங்ஹம் (வலது). - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இத்தாலியின் நேப்பொலியை வென்று தனது பிரிவில் முதவிடத்தைப் பிடித்தது ஸ்பெயினின் ரியால் மட்ரிட்.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் நேப்பொலி முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு இரண்டே நிமிடங்களில் ரியால் சமநிலை கண்டது.

22வது நிமிடத்தில் ரியால் முன்னுக்குச் சென்றது. பின்னர் 47வது நிமிடத்தில் நேப்பொலி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் ரியால் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சி’ பிரிவில் அக்குழு முதலிடத்தில் முடிப்பது உறுதியானது.

ரியால் ஏற்கெனவே காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் குழுக்கள்தான் அச்சுற்றுக்கு முன்னேறும்.

குறிப்புச் சொற்கள்