நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது நியூகாசல் யுனைடெட்.
ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் ஆன்டனி கோர்டன்.
ஒரு கோல் மட்டுமே விழுந்திருந்தாலும் ஆட்டத்தில் நியூகாசல் வெளுத்துக்கட்டியது. மான்செஸ்டர் யுனைடெட்டால் பந்தை அதிகம் தொடக்கூட முடியவில்லை.
இப்பருவம் பெரிதும் சிரமப்பட்டுவந்த மான்செஸ்டர் யுனைடெட் கடந்த சில வாரங்களாக ஓரளவு மீண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தில் கண்ட தோல்வி அக்குழுவை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேவேளை, மிகவும் சிறப்பாக விளையாடிவரும் நியூகாசல் அவ்வப்போது தடுமாறினாலும் அபாரமாக மீண்டு அசத்தி வருகிறது.