தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விட்டுக்கொடுக்காத லிவர்பூலுக்குக் கிட்டிய வெற்றி

1 mins read
956fa9ea-598e-47ba-9c70-a3ed92397566
ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் லிவர்பூலின்டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்ட். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

லிவர்பூல்: ஃபுல்ஹமுக்கு எதிரான விறுவிறுப்பான இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 4-3 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.

ஆட்டத்தில் இருமுறை முன்னுக்குச் சென்ற லிவர்பூல் 80வது நிமிடத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தது. அப்படியிருந்தும் மனவுறுதியுடன் விளையாடி 87, 88வது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது.

லிவர்பூலை வென்றே தீரவேண்டும் என்ற வீம்புடன் விளையாடியது ஃபுல்ஹம். அதையும் தங்களால் எதிர்கொள்ள முடியும் என்பதைத் தெரியப்படுத்தினர் லிவர்பூல் வீரர்கள்.

அலெக்சிஸ் மக்கேலிஸ்டர், வாட்டாரு என்டோ, டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்ட் ஆகியோர் லிவர்பூலின் மூன்று கோல்களைப் போட்டனர். அக்குழுவின் முதல் கோல், ஃபுல்ஹம் கோல் காப்பாளர் பெர்ன்ட் லெனோ சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதில் விழுந்தது.

ஹேரி வில்சன், கெனி டெட்டெ, பாபி டெ கொர்டோவா-ரீட் ஆகியோர் ஃபுல்ஹமின் கோல்களைப் போட்டனர்.

லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது லிவர்பூல்.

குறிப்புச் சொற்கள்