தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன்னம்பிக்கையுடன் மிளிரும் வில்லாவுடன் சிட்டி மோதல்

1 mins read
199419ce-e2cd-48c0-8ec4-4c894000970d
சென்ற ஆட்டத்தில் 2-2 எனும் கோல் கணக்கில் பொர்ன்மத்துடன் சமநிலை கண்ட ஆஸ்டன் வில்லா. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பர்மிங்ஹம்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆஸ்டன் வில்லாவைச் சந்திக்கவுள்ளது லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி.

கடந்த சில வாரங்களாக சிறப்பாக விளையாடி வந்துள்ள வில்லா எதிர்பார்ப்புகளை மிஞ்சியிருக்கிறது. அதேவேளை, சிட்டி கடந்த மூன்று லீக் ஆட்டங்களில் சமநிலை மட்டுமே கண்டது.

அறு ஆண்டுகளில் முதன்முறையாக சிட்டி தொடர்ந்து மூன்று லீக் ஆட்டங்களில் வெல்லத் தவறியது.

இருப்பினும் சிட்டியிடம் இருக்கும் நட்சத்திரப் பட்டாளம் எந்தக் குழுவுக்கும் பிரச்சினைகளை அள்ளித் தரக்கூடியது. லீக்கில் சற்று சிரமப்பட்டாலும் நடுவே நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் சிட்டி சிறப்பாக விளையாடியிருக்கிறது.

எனினும், லீக் பட்டியலில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் மட்டுமே சிட்டிக்குப் பின்னால் உள்ளது வில்லா. ஆட்டத்தில் வென்று பட்டியலில் சிட்டிக்கு மேல் செல்லவேண்டும் என்ற மனவுறுதி வில்லாவை ஊக்குவிக்கக்கூடும்.

சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு வில்லாவும் சிட்டியும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்