லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
புதன்கிழமை இரவு சிட்டியும் ஆஸ்டன் வில்லா குழுவும் மோதின. அதில் ஆஸ்டன் வில்லா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் சமநிலையை எட்டிய சிட்டி, ஆஸ்டன் வில்லாவுடன் தோற்றது. அதனால் சிட்டி இப்பருவத்தின் புள்ளிப் பட்டியலில் நான்காவது நிலைக்கு தள்ளப்பட்டது. வரும் 10ஆம் தேதி சிட்டி பலமில்லாத லூட்டன் அணியுடன் மோதுகிறது.
மான்செஸ்டர் சிட்டி விரைவில் வெற்றிப் பாதைக்குத் திரும்பவேண்டும், இல்லை என்றால் இப்பருவத்தில் அதனால் கிண்ணத்தைத் தக்கவைத்துகொள்ள முடியாது என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பருவத்தில் முன்னணி அணிகளுக்கு இணையாக போட்டிக்கொடுத்து வரும் அஸ்டன் வில்லா 32 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட், செல்சி மோதிய ஆட்டத்தில் யுனைடெட் 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மற்றோரு ஆட்டத்தில் லிவர்பூல் அணி செஃப்பீல்ட் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இப்பருவத்தில் பெரும்பாலான அணிகள் 15 ஆட்டங்கள் விளையாடிவிட்டன. கிட்டத்தட்ட பாதி பருவம் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் குழு 36 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
34 புள்ளிகளுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ளது.