லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழு வெற்றி இல்லாமல் திணறி வருகிறது.
வெள்ளிக்கிழமை பின்னிரவு வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் முதல் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.
இருப்பினும் வெஸ்ட் ஹாம் அணி 52, 74 நிமிடங்களில் கோல் அடித்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.
ஸ்பர்ஸ் தான் விளையாடிய கடைசி 5 ஆட்டத்தில் 4 தோல்விகளையும் ஒரு சமநிலையையும் சந்தித்துள்ளது.
பருவத்தின் தொடக்கத்தில் வெற்றி நடைபோட்ட அந்த அணி இப்போது வேறுதிசையில் செல்கிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 27 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் ஹாம் அணி 24 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி டிசம்பர் 11ஆம் தேதி நியூகாசல் அணியுடன் மோதுகிறது.