மாட்ரிட்: டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு தனது இறுதி ஆண்டு என்று குறிப்பிடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் இருந்து எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்றார் நடால்.
இதற்கு முன்னர் நடால் 2024ஆம் ஆண்டுடன் விளையாட்டில் இருந்து விடைபெறக்கூடும் என்று அறிவித்திருந்தார்.
22 முறை பொது விருதுகளை வென்று அசத்தியுள்ள 37 வயது நடால் இவ்வாண்டு ஆஸ்திரேலிய பொது விருதில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடால் ஜனவரி மாதம் பிரிஸ்பேனில் நடக்கவிருக்கும் போட்டியில் விளையாடவுள்ளார்.
ஆஸ்திரேலிய பொதுவிருதில் விளையாட அது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று டென்னிஸ் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

