ஒலிம்பிக்கை குறிவைக்கும் ஒசாக்கா

1 mins read
3e38808b-3616-463d-95a0-54cbe36f6ca2
26 வயதான ஒசாக்கா 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: பெண்கள் டென்னிஸ் பிரிவில் அதிக கவனம் ஈர்த்த நயோமி ஒசாக்கா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

26 வயதான ஒசாக்கா 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை.

இம்மாத இறுதியில் பிரிஸ்பேனில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொள்ளப்போகும் ஒசாக்கா “ எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள், நான்கு பொது விருதுகள் ஆகிவற்றில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன்” என்றார். ஒசாக்கா இதுவரை நான்கு பொதுவிருதுகளை வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்