மெல்பர்ன்: ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸ் காயம் காரணமாக அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய பொதுவிருது போட்டியில் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கிரியோஸ் கடந்த ஆண்டும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய பொதுவிருதில் விளையாடவில்லை. இடது மூட்டில் ஏற்பட்ட காயத்தால் கிரியோஸ் இவ்வாண்டு பெரும்பாலான டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
துடிப்பான ஆட்டத்தையும் அதே நேரம் சர்ச்சைக்குரிய சில நடவடிக்கைகளையும் செய்யும் கிரியோஸ் இம்முறை ஆஸ்திரேலிய பொதுவிருதில் இல்லாதது அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.
சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் விளையாடாமல் இருப்பது கவலை தருவதாக 28வயது கிரியோஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

