தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘செல்சியின் எதிர்காலம் நன்றாக உள்ளது’

2 mins read
82b9d7d1-0f9c-4452-8599-b759abd88dd2
தற்போது புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கும் செல்சி அணியில் பல இளம் விளையாட்டாளர்கள் உள்ளனர்.  - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டக் குழுவான செல்சி மீது தற்போது அதிக நெருக்கடி எழுந்துள்ளது. முன்னணி அணியாக திகழ்ந்த செல்சி அண்மை காலமாக சரியாக விளையாடுவதில்லை.

கடந்த மாதம் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவை 4-1 என்று வீழ்த்திய செல்சி, மான்செஸ்டர் சிட்டியுடன் 4-4 என்று சமநிலை எட்டியது. அதன் பின்னர் செல்சி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் நியூகாசல் யுனைடெட் குழுவிடம் 4-1 என்று தோற்றது. பிறகு பிரைட்டன் அணியை வீழ்த்தியது. பின்னர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோற்றது.

அதனால் இனி வரும் ஆட்டங்களில் அது அதிக கவனத்துடன் விளையாடக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். சீராக விளையாடி புள்ளிகளை பெற்று முதல் ஆறு இடங்களை அது குறிவைக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

இந்நிலையில் செல்சி அணியின் பயிற்றுவிப்பாளர் மரி‌ஷியோ போச்சிட்டினோ “ தற்போது நெருக்கடி இருந்தாலும் அணியின் எதிர்காலம் நன்றாக இருப்பதாக,” தெரிவித்துள்ளார்.

“ஞாயிற்றுக்கிழமை எவர்ட்டன் அணியுடன் மோதுகிறோம், வெற்றிபெற்றுவிட்டால் போதும், குழு மீதான நெருக்கடி பறந்துவிடும், வெல்லத் தவறினால் பிரச்சினை எழும். அதனால் தான் அணியின் வெற்றிக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறோம்,” என்றார் போச்சிட்டினோ.

எதிர்காலத்தை நோக்கி செயல்பட்டு வருகிறோம், அது நிச்சயம் கைகொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கும் செல்சி அணியில் பல இளம் விளையாட்டாளர்கள் உள்ளனர்.

“நம்பிக்கையான பல இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். இப்போது முதல் நான்கு இடத்திற்கு முன்னேறாமல் போனாலும் அடுத்துவரும் பருவங்களில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணியாக செல்சி இருக்கும்,” என்றார் போச்சிட்டினோ.

நியூகாசல் யுனைடெட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உற்சாகத்தில் உள்ளது எவர்ட்டன். அதனால் இந்த ஆட்டத்தில் அணல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவர்ட்டன் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. அது அடுத்த பருவத்திலும் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதனால் செல்சி அணிக்கு எவர்ட்டன் பலத்த போட்டி கொடுக்கக்கூடும்

சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் குழு 36 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 34 புள்ளிகளுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்டன் வில்லா 32 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி 30 புள்ளிகளுடன் நான்காவது நிலையில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட்30 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்