பர்மிங்ஹம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆர்சனலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்டன் வில்லா.
ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் ஜான் மக்கின்.
பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள வில்லா, முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலுக்கு இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே பின்னால் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ளது ஆர்சனல்.
கடந்த சில வாரங்களாக அபாரமாக விளையாடிவரும் வில்லா எதிர்பாரா விதமாக லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் இடம்பெறக்கூடும் என்ற உணர்வு தலைதூக்கியுள்ளது. ஒரு வாரத்தில் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் ஆகிய இரண்டு குழுக்களையும் வென்று தனது ரசிகர்கள், நடுநிலை ரசிகர்கள் இரு தரப்பினருக்கும் இன்ப அதிர்ச்சி தந்துள்ளது வில்லா.