மீண்டும் வெற்றிப் பாதையில் ஸ்பர்ஸ்

மீண்டும் வெற்றிப் பாதையில் ஸ்பர்ஸ்

2 mins read
8e237e4d-8dda-4d6c-99c8-9f24d2424d1f
நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார் ஸ்பர்சின் ரிச்சார்லிசன். - படம்: இபிஏ
multi-img1 of 2

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.

பிரிமியர் லீக்கில் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு ஸ்பர்ஸ் வென்றிருக்கும் முதல் ஆட்டம் இது. இந்த ஆட்டத்துக்கு முன்பு ஐந்து லீக் ஆட்டங்களில் முதல் கோலைப் போட்டு முன்னுக்குச் சென்றபோதும் அவற்றில் வெல்லத் தவறியது அக்குழு.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் ஸ்பர்ஸ்தான் அவ்வாறு செய்த முதல் குழுவாகும்.

அந்தப் போக்கை நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக முறியடித்தது ஸ்பர்ஸ். முற்பாதியாட்டத்தில் டெஸ்டினி உடோகி 26வது நிமிடத்தில் ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார். 38வது நிமிடத்தில் ரிச்சார்லிசன், கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.

60வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டார் ரிச்சார்லிசன். 85வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் ஸ்பர்ஸ் அணித்தலைவர் சொன் ஹியோங் மின்.

91வது நிமிடத்தில் ஜொவெலின்டன் நியூகாசலின் ஆறுதல் கோலைப் போட்டார்.

ஸ்பர்சில் சேர்ந்த பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாட சிரமப்பட்டுவந்த பிரேசிலிய வீரர் ரிச்சார்லிசன் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அக்குழுவின் ரசிகர்களுக்குப் புத்துயிர் தந்தார். ஸ்பர்சுக்கு 48 ஆட்டங்களில் ஐந்து கோல்களை மட்டுமே போட்டிருந்த ரிச்சார்லிசன் இந்த ஆட்டத்தில் மட்டும் இரண்டு கோல்களைப் போட்டார்.

இந்த லீக் பருவத்தை சிறப்பாகத் தொடங்கி அதற்குப் பிறகு களையிழந்து காணப்பட்ட ஸ்பர்ஸ் இந்த ஆட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் அறிகுறிகளைக் காண்பித்தது.

தொடர்புடைய செய்திகள்

சென்ற லீக் ஆட்டத்தில் எவர்ட்டனிடம் 3-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த நியூகாசல், தொடர்ந்து இரண்டாவது லீக் ஆட்டத்தில் மூன்று கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குறிப்புச் சொற்கள்