தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்தடுத்த ஆட்டங்களில் 5-0 என வென்ற ஃபுல்ஹம்

1 mins read
34a41d83-03ae-47af-acbd-10261b72605d
வில்லியான் கோல் போட்ட பிறகு கொண்டாடும் ஃபுல்ஹமின் ராவுல் ஹிமெனெஸ் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் 5-0 எனும் கோல் கணக்கில் வென்றிருக்கிறது ஃபுல்ஹம்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 5-0 எனும் கோல் கணக்கில் ஃபுல்ஹம் வென்றது. நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான இதற்கு முந்திய லீக் ஆட்டத்திலும் இதே கோல் எண்ணிக்கையில் வென்றது ஃபுல்ஹம்.

சென்ற வாரம் லிவர்பூலிடம் தோல்வியடைந்தபோதும் முன்று கோல்களைப் போட்டது ஃபுல்ஹம். அந்த ஆட்டத்தின் கோல் எண்ணிக்கை 4-3.

கடந்த நான்கு லீக் ஆட்டங்களில் ஃபுல்ஹம் குறைந்தது மூன்று கோல்களைப் போட்டிருக்கிறது.

வெஸ்ட் ஹேமுக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்து கோல்களையும் வெவ்வேறு வீரர்கள் போட்டனர். ராவுல் ஹிமெனெஸ், வில்லியான், டொசின் அடாராபியோயோ, ஹேரி வில்சன், கொர்லோஸ் வினிசியஸ் ஆகியோர் ஃபுல்ஹமின் கோல்களைப் போட்டனர்.

குறிப்புச் சொற்கள்