தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருமூச்சு விட்ட சிட்டி

1 mins read
6dba34cd-919f-4911-97d7-9304357ac522
லூட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட்ட பிறகு கொண்டாடும் பெர்னார்டோ சில்வா. - படம்: ராய்ட்டர்ஸ்

லூட்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் ஐந்து ஆட்டங்களில் முதன்முறையாக வெற்றிகண்டுள்ளது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.

எனினும், ஆட்டத்தில் சிட்டி சற்று போராடி வெல்ல வேண்டியிருந்தது. முற்பாதியாட்டத்தில் எலி‌ஷா அடெபயோ லூட்டனை முன்னுக்கு அனுப்பினார். பிற்பாதியாட்டத்தில் பெர்னார்டோ சில்வா, ஜேக் கிரீலி‌ஷ் ஆகியோர் கோல் போட்டு சிட்டியை வெல்ல வைத்தனர்.

ஆட்டத்தில் சிட்டி பல கோல் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது. அதற்குப் பிறகு ஒருவழியாக 62வது நிமிடத்தில் சில்வா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அதற்கு மூன்றே நிமிடங்களுக்குப் பிறகு வெற்றி கோலைப் போட்டார் கிரீலி‌ஷ்.

சென்ற மூன்று லீக் ஆட்டங்களில் வெல்லத் தவறிய சிட்டியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் காயமுற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

லீக் பட்டியலில் சிட்டி நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடம் வகிக்கும் லிவர்பூலுக்கு நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்று பின்னால் உள்ளது மான்செஸ்டர் சிட்டி குழு.

குறிப்புச் சொற்கள்