மியூனிக்: யூயேஃபா எனும் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்கள் ஒன்றியம் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவுக்கு அபராதம் விதித்துள்ளது.
அதோடு ஒழுங்கான நடத்தையைப் பின்பற்றாவிட்டால் அக்குழுவின் ரசிகர்கள் ஆட்டங்களை நேரில் காண்பதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் யூயேஃபா எச்சரித்தது. அந்தத் தடை, ஐரோப்பிய போட்டிகளில் இதர குழுக்களின் விளையாட்டரங்குகளில் பயர்ன் விளையாடும் ஆட்டங்களுக்குப் பொருந்தும்.
தடை செய்யப்பட்ட வாணவேடிக்கைகளை தங்கள் ரசிகர்கள் பயன்படுத்தியது போன்ற செயல்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டதாக பயர்ன் திங்கட்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.