தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டென் ஹாக்: இனி யுனைடெட் லீக்கில் கவனம் செலுத்தலாம்

1 mins read
589bfbed-26cb-489f-b9ad-5dc9d63852bd
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக். - படம்: இபிஏ
multi-img1 of 2

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மான்செஸ்டர் யுனெடெட் இனி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் தன்னை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தலாம் என்று அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது யுனைடெட். ஆட்டத்தின் ஒரே கோலை கிங்ஸ்லீ கோமன் போட்டார்.

“இன்னும் பல இலக்குகள் உள்ளன. இனி நாம் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்தலாம், சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும் அளவிற்கு நாங்கள் விளையாடவேண்டும்,” என்றார் டென் ஹாக். இப்பருவத்தில் யுனைடெட் இதுவரை எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததால் டென் ஹாக் மிகுந்த நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

‘ஏ’ பிரிவில் விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே யுனைடெட் வெற்றிபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களில் முடிக்கும் குழுக்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். மூன்றாவது இடத்தில் முடிக்கும் குழு யூரோப்பா லீக் போட்டிக்குச் செல்லும்.

‘ஏ’ பிரிவில் நான்காவது இடத்தில் முடித்ததால் யுனைடெட் இப்பருவம் எந்த ஐரோப்பிய லீக்கிலும் இனி போட்டியிடாது.

குறிப்புச் சொற்கள்