ரோம்: இத்தாலி காற்பந்து நட்சத்திரம் ஜார்ஜியோ கியலினி ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
39 வயது கியலினி அணித்தலைவராக இருந்த இத்தாலி அணி, எதிர்பார்ப்புகளை முறியடித்து யூரோ 2020 கிண்ணத்தை வென்றது. 23 ஆண்டுகளாக நிபுணத்துவ காற்பந்து வீரராக இருந்துவிட்டு இவர் ஓய்வுபெறுகிறார்.
இத்தாலிய குழுவான யுவென்டசில் பெயர் பதித்த கியலினி, சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் எஃப்சி குழுவுக்கு விளையாடி வந்தார்.
மேலும், யுவென்டசில் இருந்த காலத்தில் இத்தாலியின் டூரின் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் கியலினி.

