கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (எஸ்எல்சி) உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ததை அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ மீட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கிரிக்கெட் விவகாரங்களில் தலையிட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தற்காலிகமாக நீக்கியது. முடிவை மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் மீண்டும் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று திரு ஃபெர்னாண்டோ நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.