கேபர்ஹா (தென்னாப்பிரிக்கா): இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது போட்டியிட்டுவரும் டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா முன்னணி வகிக்கிறது.
இத்தொடரின் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் டிஎல்எஸ் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
அதனைத் தொடர்ந்து அந்த அணி 1-0 எனும் ஆட்டக் கணக்கில் தொடரில் முன்னணி வகிக்கிறது.
முதலில் பந்தடித்த இந்தியா 19.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா ஆட்டத்தில் வெற்றிபெற டிஎல்எஸ் முறைப்படி 15 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஏழு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது தென்னாப்பிரிக்கா.

