கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக நியமித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெயசூர்யாவுக்கு அனைத்துலக கிரிக்கெட் மன்றம் இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருந்தது. அந்தத் தடை முடிவடைவதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
54 வயது ஜெயசூர்யா, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வீரர். அவர் இலங்கை அணியை அதன் தலைவராக வழிநடத்தியுள்ளார்.
அண்மைய கிரிக்கெட் ஆட்டங்களில் இலங்கையால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மிக மோசமாக விளையாடியது.
இதைத்தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றஙள் இடம்பெற்றுவருகின்றன.