லண்டன்: வியாழக்கிழமை பின்னிரவு நடந்த யூரோப்பா லீக் காற்பந்து ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான பிரைட்டன், பிரான்சின் ஒலிம்பிக் மார்சியேல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில், 88வது நிமிடத்தில் ஜோவா பெட்ரோ கோல் அடித்து பிரைட்டன் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரைட்டன் அணி ‘பி’ பிரிவில் முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மார்சியேல் அணியும் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணிகளான லிவர்பூல், வெஸ் ஹாம் யுனைடெட் ஆகியவையும் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றன.
யூரோப்பா லீக் போட்டியில் பிரிவு ஆட்டங்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.