மும்பை: இங்கிலாந்தும் இந்தியாவும் மோதிய பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 347 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிகண்டுள்ளது இந்தியா.
ஒரே ஆட்டத்தைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா விருதை வென்றது.
முதலில் பந்தடித்த இந்தியா, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ஓட்டங்களைக் குவித்தது. அதற்குப் பிறகு இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிபெற தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 479 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.
ஆனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆட்டத்தில் இங்கிலாந்து அதிகம் போட்டி தரவில்லை என்று கூறப்பட்டது.
தீப்தி சர்மா, பூஜா வஸ்திராகர் இருவரும் இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். இந்தியாவின் முதல் இன்னிங்சில் 67 ஓட்டங்களை எடுத்தார் தீப்தி.
முதன்முறையாக இந்தியாவுக்குக் களமிறங்கிய சுபா சத்தீஷ், அதிவேகமாக 50 ஓட்டங்களைக் குவித்தார். அவர் 49 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில் 69 ஓட்டங்களை எடுத்த சுபா, ஓர் ஆட்டத்தில் இரண்டாவது ஆக வேகமாக 50 ஓட்டங்களை எடுத்த இந்திய வீராங்கனை ஆவார்.

