மீண்டும் வென்ற ஸ்பர்ஸ்

மீண்டும் வென்ற ஸ்பர்ஸ்

1 mins read
ef5f8b5d-47eb-4b13-b141-9107046a387d
நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பர்சின் முதல் கோலைப் போடும் ரிச்சார்லிசன் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

நாட்டிங்ஹம்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.

ஐந்து லீக் ஆட்டங்களில் வெல்லாதிருந்த ஸ்பர்ஸ் சென்ற லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது ஃபாரஸ்ட்டையும் வென்றுள்ளது.

நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்ட ஸ்பர்சின் ரிச்சார்லிசன் ஃபாரஸ்ட்டுக்கு எதிராகவும் ஒரு கோல் போட்டார். ஸ்பர்சின் இரண்டாவது கோலைப் போட்டவர் டே‌ஷான் குலுசெவ்ஸ்கி.

கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது ஃபாரஸ்ட். அதனால் அக்குழுவின் நிர்வாகி ஸ்டீக் கூப்பர் பெரும் நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்