புதுடெல்லி: இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர் முகம்மது ஷமி விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விரு அணிகளும் மோதவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்தியாவின் தீபக் சாஹாரும் இடம்பெறமாட்டார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் போட்டிகளின் இறுதியாட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதுதான் ஷமி கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாகும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற நிலையில் அவரின் உடல் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
குடும்பக் காரணங்களால் தீபக் சாஹார் தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 17லிருந்து 21ஆம் தேதிவரை இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்று ஒருநாள் ஆட்டங்களில் களமிறங்கும். அதற்குப் பிறகு டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும். ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும்.
(Source: https://www.straitstimes.com/sport/indias-shami-ruled-out-of-south-africa-tests-chahar-unavailable-for-odis)

