தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புது அணித்தலைவர்: கோபத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்

1 mins read
98cc3005-8d60-4a3f-92d9-a7681eb9ed6c
சில நாள்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமான ஐபிஎல் குழுக்களில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று.

சில நாள்களுக்கு முன்பு அந்த அணியின் புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ரோகித் சர்மா அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

இது அந்த அணியின் ரசிகர்களை கோபத்தில் தள்ளியுள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தரும் வகையில் மும்பை இந்தியன்ஸ் குழு சார்ந்த  சமூக ஊடகங்களை பின்பற்றுவதில் இருந்து ரசிகர்கள் விலகி வருகின்றனர். குறிப்பாக 500,000 மேற்பட்ட கணக்குகள் மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து விலகின.

மேலும் ரோகித் சர்மா வேறு ஐபிஎல் குழுவுக்கு செல்ல வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 36 வயது ரோகித் சர்மா 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கிண்ணத்தை வென்று தந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்