லண்டன்: சனிக்கிழமை இரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் லூட்டன் டவுன் அணியும் போர்ன்மத்தும் மோதின.
ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் லூட்டன் அணித்தலைவர் டாம் லாக்யெர் திடலிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் மருத்துவ உதவியாளர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளும் 1-1 என்ற கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
தற்போது லாக்யெரின் உடல்நிலை சீராக இருப்பதாக லூட்டன் அணி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் இதே போன்று மாரடைப்பால் ஆட்டத்திற்கு நடுவே மயங்கி விழுந்தார் லாக்யெர். அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் காற்பந்து போட்டிகளில் விளையாடத் திரும்பினார்.