தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்சி, நியூகாசல் வெற்றி

1 mins read
11ba442e-06d1-4e29-80ff-a3304ebcb127
செல்சி 2-0 என்ற கோல் கணக்கில் செஃப்பீல்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் சனிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட் அணி புல்ஹம் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் புல்ஹம் அணியின் ராவ்ல் ஜிமென்சுக்கு தப்பாட்டம் காரணமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனால் 10 வீரர்களுடன் நியூகாசலை சமாளிக்க வேண்டிய நிலைக்கு புல்ஹம் தள்ளப்பட்டது.

ஆட்டத்தின் 57, 64, 82ம் நிமிடங்களில் நியூகாசல் கோல் அடித்து ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.

மற்றோர் ஆட்டத்தில் செல்சி 2-0 என்ற கோல் கணக்கில் செஃப்பீல்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் க்கோல் பால்மர் செல்சிக்கு முதல் கோல் அடித்தார். 61வது நிமிடத்தில் நிக்கலஸ் ஜாக்சன் இரண்டாம் கோலை அடித்தார்.

நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி கிறிஸ்ட்டல் பேலஸ் உடன் விளையாடி ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தது.

ஆட்டத்தின் 24, 54வது நிமிடங்களில் சிட்டி கோல் அடித்தது. 76வது நிமிடத்தில் கிறிஸ்ட்டல் பேலஸ் முதல் கோலை பதிவு செய்தது.

சிட்டி ஆட்டத்தை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்ட்டல் பேலஸ் கோல் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாகவே புள்ளிகளை சரியாக குவிக்க முடியாமல் சிட்டி திணறிவருகிறது.

குறிப்புச் சொற்கள்