தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து அசத்தும் வில்லா

1 mins read
22cb9f23-3798-4a51-96cf-aeb6d659ab8a
பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் அக்குழுவின் நீல் மொவ்பெயுடன் (வலது) மோதும் வில்லா கோல் காப்பாளர் எமி மார்ட்டினெஸ். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான காற்பந்தாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்டன் வில்லா.

முன்னாள் பிரென்ட்ஃபர்ட் வீரர் ஒலி வாட்கின்ஸ் ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார். அதற்கு முன்பு 77வது நிமிடத்தில் வில்லாவின் அலெக்ஸ் மொரேனோ கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியிருந்தார்.

முற்பாதியாட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் பிரென்ட்ஃபர்டை முன்னுக்கு அனுப்பினார் கீன் லூயிஸ்-பொட்டர். 71வது நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக பிரென்ட்ஃபர்டின் பென் மீ சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து வில்லா மீண்டது.

ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் வில்லாவின் பூபக்கார் கமாராவும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் ஐந்தில் வெற்றிபெற்றுள்ள வில்லா பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் இரு குழுக்களின் வீரர்களும் சில வேளைகளில் கோபத்தில் மோதிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்