தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலிடம் சென்ற ஆர்சனல்

1 mins read
ee97d323-1c48-412c-9f4f-15dfec855082
பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போடும் கய் ஹாவர்ட்ஸ் (வலது). - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பிரைட்டனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார் கேப்ரியல் ஜேசுஸ். 87வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார் கய் ஹாவர்ட்ஸ்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்சனல் லீக் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த ஆட்டம் ஆர்சனலின் எமிரட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு முன்பு அங்கு விளையாடிய மூன்று ஆட்டங்களில் பிரைட்டன் வென்றிருந்தது.

அதோடு, இந்த லீக் பருவத்தில் பிரைட்டனை ஒரு கோல்கூடப் போடவிடாத முதல் குழு என்ற பெருமை ஆர்சனலைச் சேர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது வெஸ்ட் ஹேம் யுனைடெட்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்