தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி

1 mins read
71e7e181-5913-445e-895b-f39fd3f1e6b1
நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டிகளில் வெற்றிபெற்ற பிறகு கொண்டாடும் செல்சியின் மாலோ குஸ்டோ (நடுவில்). - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை வென்றுள்ளது செல்சி.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கலம் வில்சன் நியூகாசலை முன்னுக்கு அனுப்பினார். அக்குழு வெற்றிபெறும் விளிம்பில் இருந்தபோது ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார் செல்சியின் மிக்காய்லோ முட்ரிக்.

அதற்குப் பிறகு வெற்றிபெறும் குழு பெனால்டிகளின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. பெனால்டிகளில் 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி.

இதற்கு முன்பு நடைபெற்ற ஐந்து ஆட்டங்களில் செல்சி, மூன்றில் தோல்வியடைந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு இவ்விரு குழுக்களும் மோதிய இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் நியூகாசல் அபார வெற்றிகண்டது.

செல்சியின் சொந்த மண்ணான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற கரபாவ் கிண்ணக் காலிறுதியாட்டத்தில் செல்சி விட்டுக்கொடுக்காமல் விளையாடியது.

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இக்குழுவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இந்த மகிழ்ச்சி தேவைப்பட்டது. இது பெரிய ஊக்குவிப்பாக அமைந்துள்ளது,” என்றார் செல்சி நிர்வாகி மொரிச்சியோ பொக்கட்டினோ.

“இது பல இளையர்களைக் கொண்ட குழு. அப்படியிருந்தும் நல்ல குழு உணர்வை உருவாக்கி வருகிறோம். இந்த ஆட்ட முடிவு எங்களுக்கு உதவும்,” என்றும் குறிப்பிட்டார் பொக்கட்டினோ.

குறிப்புச் சொற்கள்