டரூபா: டி20 கிரிக்கெட் தொடரில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இங்கிலாந்து.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைக் குவித்தது. டி20 போட்டிகளில் இங்கிலாந்து இதற்கு முன்பு இத்தனை ஓட்டங்களை எடுத்ததில்லை.
அதற்குப் பிறகு பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ், 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சதமடித்தார் இங்கிலாந்தின் ஃபில் சால்ட். இப்போட்டியில் அவர் 119 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு அடுத்த நிலையில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த டி20 தொடரின் ஆட்டக் கணக்கு 2-2 என இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீசும் சமநிலையில் உள்ளன.

