தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

1 mins read
46ffdafe-9445-48e5-87d0-05f543a3864a
ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் அடித்த மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன். - படம்: ராய்ட்டர்ஸ்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ஓட்டங்களும், திலக் வர்மா 52 ஓட்டங்களும் விளாசினர்.

இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் அடித்த சாம்சன் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 3 ஆட்டங்களில் 10 விக்கெட் வீழ்த்திய அர்‌ஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருதை வென்றார்.

குறிப்புச் சொற்கள்