டிரினிடாட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5ஆவது டி20 ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
சுலபமான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 133 ஓட்டங்களை எட்டி வெற்றிபெற்றது.
இத்தொடரில் சிறப்பாக பந்தடித்த இங்கிலாந்தின் பில் சால்ட் தொடர்நாயகன் விருதை வென்றார்.
இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.