மயாமி: உருகுவேயைச் சேர்ந்த லூயிஸ் சுவாரஸ், காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியுடன் மீண்டும் இணைந்து விளையாடவுள்ளார்.
தற்போது மெஸ்ஸி, அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர் மயாமி குழுவில் விளையாடி வருகிறார். அந்த குழுவில் சுவாரஸ் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான சுவாரஸ் இதற்கு முன்னர் பார்சலோனா குழுவில் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடியுள்ளார். இருவரின் கூட்டணியில் பார்சலோனா அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. இன்டர் மயாமி அணியில் செர்கியோ புஸ்கெட்ஸ், யோர்டி அல்பா உள்ளிட்ட பார்சிலோனா குழுவின் முன்னாள் விளையாட்டு வீரர்களும் உள்ளனர்.
இன்டர் மயாமி அணியில் சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் முதல் ஆட்டத்தை எதிர்பார்த்து ஆர்வமாக இருப்பதாகவும் சுவாரஸ் தெரிவித்தார். இன்டர் மயாமி குழுவின் இணை உரிமையாளர் முன்னாள் காற்பந்து வீரர் டேவிட் பெக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி அந்த அணியில் சேர்ந்த பிறகு அது உலக அளவில் பிரபலமானது.

