வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்டன் வில்லா

1 mins read
68303700-10f9-44ab-b607-3b604b048b25
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவும் செஃப்பீல்ட் யுனைடெட் அணியும் மோதின.

பரபரப்பாக சென்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்தப் பருவத்தில் முன்னணி அணிகளைப் போல் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்டன் வில்லா இந்த ஆட்டத்தை எளிதாக வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் கோல் அடித்து செஃப்பீல்ட் யுனைடெட் அதிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் ஆஸ்டன் வில்லா ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கோல் அடித்து சமநிலை கண்டது.

‘விஏ­ஆர்’ எனப்­படும் காணொளிவழி நடுவருக்கு உதவும் தொழில்­நுட்­பம் தங்களுக்கு பாதகமாக செயல்பட்டதாக ஆஸ்டன் வில்லா குறைகூறியுள்ளது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் குழு 39 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 39 புள்ளிகளுடன் ஆஸ்டன் வில்லா இரண்டாவது இடத்தில் உள்ளது. லிவர்பூல் 38 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி நான்காவது நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்