லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட், மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஜேரட் போவன், முகம்மது குடூஸ் ஆகியோர் கோல்களைப் போட்டனர். எல்லா போட்டிகளிலும் கடந்த ஏழு ஆட்டங்களில் நான்கில் தோல்விகண்டுள்ள மான்செஸ்டர் யுனைடெட், அவற்றில் ஒன்றில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது.
மேலும், 31 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்தடுத்த நான்கு ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் கோல் போடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த நெருக்கடியான காலத்தில் ஒன்றுபட்டு இருக்குமாறு தனது விளையாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டார் அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக்.
“நாம் அமைதியாக இருக்கவேண்டும், ஒன்றாக இருக்கவேண்டும், திட்டத்திலிருந்து விலகாமல் இருக்கவேண்டும். இவற்றை ஒன்றாகச் செய்யவேண்டும்,” என்றார் டென் ஹாக்.