லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லிவர்பூல், ஆர்சனல் ஆகிய இரண்டு காற்பந்துக் குழுக்களும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார் கேப்ரியல் மகால்ஹெய்ஸ். 29வது நிமிடத்தில் லிவர்பூலின் முகம்மது சாலா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
இப்பருவம் பிரிமியர் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் இவ்விரு குழுக்களும் இடம்பெற்றுள்ளன.
2004ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக லீக் விருதை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது ஆர்சனல். அக்குழு தற்போது பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.