காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முஜிப் உர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் லீக் அணிகளுக்காக விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
மேலும், இந்த மூவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு விளையாட வகைசெய்யும் ஒப்பந்தம் இன்னும் நீட்டிக்கப்படவில்லை. அந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் நீட்டிக்கப்படும் ஒன்று.
தேசத்துக்கான பொறுப்பைத் தட்டிக்கழித்த காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிககெட் வாரியம் கூறியது.
முஜிப், ஃபரூக்கி, நவீன் மூவரும் வெளிநாடுகளில் விளையாட அனுமதி அளிக்கும் வகையில் உள்ளூரில் வியைாடுவதற்கான ஒப்பந்தங்களில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக வாரியம் கூறியது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு விளையாடும் முஜிப்பை ஐபிஎல் அணியான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அண்மையில் வாங்கியது. நவீன், ஃபரூக்கி ஆகியோரும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்தவர்கள்.

