தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோய்லாண்டின் முதலாவது லீக் கோல் வெற்றியைத் தேடித் தந்தது

1 mins read
408618b4-46c2-4df0-ad0e-2c0570d09f46
தான் விளையாடிய 14 லீக் ஆட்டங்களில் கோல் போடாத மான்செஸ்டர் யுனைடெட்டின் ராஸ்முஸ் ஹோய்லாண்ட் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கோலைப் போட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதலாவது லீக் கோலைப் போட்டார் மான்செஸ்டர் யுனைட்டெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் ராஸ்முஸ் ஹோய்லாண்ட்.

அதுவே அவரது குழு வெற்றி பெறுவதற்கான வெற்றி கோலாக அமைந்தது.

டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் கோல் போட்ட தருணம் தன்னை மிகுந்த மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது என்று அவர் கருத்துரைத்தார். யுனைடெட்டுக்கு அவர் ஆடிய 14 லீக் ஆட்டங்களில் அவரால் கோல் போட முடியவில்லை. இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் அவர் ஐந்து கோல்களைப் போட்டிருக்கிறார்.

ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் 21வது, 26வது நிமிடங்களில் ஆஸ்டன் வில்லா இரண்டு கோல்கள் போட்டு முன்னணிக்குச் சென்றது. ஆட்டத்தின் பிற்பாதியில் யுனைடெட் முனைப்புடன் ஆடியது.

ஆட்டத்தின் 59வது நிமிடத்திலும் 71வது நிமிடத்திலும் அலெக்சாண்ட்ரோ கார்னாச்சோ கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தினார். பின்னர் 20 வயது ஹோய்லாண்ட் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் வெற்றிக் கோலைப் போட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்