பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

1 mins read
6a9d2a1c-cf38-4b01-ac10-3e4c2af65a73
இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 318 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்கு பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்சில் 264 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் கட்டுப்பாடுடன் பந்து வீசிய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை 262 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.

சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

குறிப்புச் சொற்கள்