லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் வியாழக்கிழமை பின்னிரவு நடந்த காற்பந்து ஆட்டங்களில் ஆர்சனல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணிகள் தோல்வியைத் தழுவின.
வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி ஆர்சனல் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பை ஆர்சனல் தவறவிட்டது.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரைட்டன். முதல் 75 நிமிடங்களில் பிரைட்டன் குழு 4 கோல்கள் அடித்தது. ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து மோசமான தோல்வியை தவிர்த்தது ஸ்பர்ஸ்.
புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் குழு 42 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 40 புள்ளிகளுடன் ஆர்சனல் இரண்டாவது இடத்தில் உள்ளது.