தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடுவோம்: ரோகித் சர்மா

1 mins read
c356507d-f0db-4188-a1c5-f282243b33ca
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி. - படம்: ராய்ட்டர்ஸ்

டர்பன்: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி.‌

ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 131 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது.

‘இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கடுமையான போட்டி கொடுக்கும், தொடரை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் தருகிறது. பந்துவீச்சில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம், இரண்டாவது இன்னிங்சில் பந்தடிப்பில் மோசமாக செய்தோம்” என்றார் அணித் தலைவர் ரோகித் சர்மா.

இரண்டாவது ஆட்டம் கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்