கொழும்பு: டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவராக வனிந்து ஹசரங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவராக குசால் மெண்டிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சரித் அசலங்கா துணை அணித் தலைவராகப் பொறுப்பு வகிப்பார் என்றும் வாரியம் குறிப்பிட்டது.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் வாரியம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.